சுனாமிக்கு பின்னரான காலப்பகுதில் அமைக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைக்கப் பட்ட மனித கழிவை சுத்திகரிக்கும் இந்த கட்டிடம் போது மக்களுக்கு எந்தவிதமான நண்மைகளையும் வழங்கவில்லை மாறாக கஸ்டத்தையே வழங்கின..இந்த கட்டிடம் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அதில் இருந்து வந்த துர் நாற்றம் மக்களின் அன்ராட வாழ்க்கையினை பாதித்தது. இதனால் அந்த கட்டிடத்தை சுழவுள்ள மக்கள் பல ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு இவ்விடயத்தினை தெரிவித்து உடனடியாக இதனை வேறு இடத்திற்க மாற்றினார்கள். உண்மையிலயே இவ்வாரான கட்டிடங்கள் மனித நடமாற்றம் இல்லாத இடங்களில் அமைப்து தான் பொறுத்தம்.
இன்று மக்கள் செய்தியின் தேடல் சுட்டிக்காட்ட விரும்புவது
இந்த கட்டிடத்தால் புதிய வகையான பிரச்சினைகள் தற்போது வர ஆரம்பித்துள்ளன .....
1 வது பிரச்சினை :
மழை காலங்களில் பெய்கின்ற மழை நீரானது கழிவை சுத்திகரிக்க அமைக்கப்பட்ட திறந்த டாங்கி பகுதிக்குள் தேங்கி நிற்கின்றன அது மாத்திரம் அன்றி டாங்கிற்குள் பல குப்பைகளும் கிடக்கின்றன. இதனால் அந்த இடத்தினை டெங்கு நுழம்புகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் அடிக்கடி சுகயீனம் இல்லாமல் போகின்றனர் (குறிப்பாக குழந்தைகள்)



2வது பிரச்சினை :
இந்த கட்டிடத்தில் ஒரு அறை உள்ளது இரவு நேரங்களில் அந்த அறையில் கஞ்சா சாராயம் போன்றவற்றை குடிப்பதர்க்கு வசதியாக பயண்படுத்திக்கொள்கின்றனர். இது பெரும் பிரச்சினையாக உள்ளது.
அது மாத்திரம் இன்றி சிறு பிள்ளைகளை இரவு நஅரங்களில் அங்கு அழைத்து சென்று சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் ஈடுபடுகின்றனர் என்றும் அப்பிரதேச மக்கள் விதனம் தெரிவிக்கின்ரனர்.
இவ்வாரான சீர்கேடுகளுக்கு ஆதரவளிக்கும் இந்த கட்டிடத்தை உடணடியாக அவ்விடத்தை விட்டு அகற்றுமாரு அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய அரசியல் வாதிகள் இந்த பிரச்சினையை உடணடியாக தீர்க்குமாறும் அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்





