Wednesday, April 27, 2016
Thursday, April 7, 2016
Sunday, March 20, 2016
Saturday, March 19, 2016
Friday, March 18, 2016
Tuesday, February 9, 2016
Tuesday, December 29, 2015
Saturday, September 19, 2015
Thursday, June 19, 2014
கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான நுளை வாயிலின் அவல நிலை
(Nawas Jazeel)
கல்முனை
ஸாஹிரா தேசிய பாடசாலையின் பிரதான நுளை வாயிலை அண்மையில் பல லெட்சம்
செலவில் புணரமைத்துள்ள அழகையும், முதலாவது படத்தில் அது பகலில்
காட்சியழிக்கும் தோற்றத்தையும் , இரண்டாவது படத்தில் அது இரவில்
காட்சியழிக்கும் தோற்றத்தையும் பார்ப்பதுடன், கல்முனை
பாளிகா பெண்கள் பாடசாலையின் பகல் இரவு வேளைகளில் அழகாக காட்சியழிக்கும்
படங்களை முறையே மூன்றாம் நான்காம் படங்களிலும் பாருங்கள். இப்படியாக இரவில்
இருளாக காணப்படும் இந்த தேசிய பாடசாலையின் நுளை வாயிலை வெளிச்சமூட்டி
அழகுபடுத்தவைக்க சம்மந்தப் பட்டவர்கள் கண்மூடித்தனமாக இருப்பது ஏன் ?
Wednesday, May 21, 2014
விபரீதம் நிகழ்ந்த பின் தான் தீர்வா..? கிழக்கிலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் எழில் கொஞ்சும் கிராமங்களில் ஒன்றுதான் சாய்ந்தமருது.
கிழக்கிலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் எழில் கொஞ்சும் கிராமங்களில்
ஒன்றுதான் சாய்ந்தமருது. அது குறுகிய நிலப்பரப்பிற்குள்ளே நிறைந்த
சனங்களைக் கொண்ட அடர்த்தியானதொரு கிராமமாகும்.
இந்தக் கிராமத்தை கிழக்கு மேற்காக ஊடறுத்துச் செல்கின்ற முக்கியமான
வீதிகளில், அல்-ஹிலால் வடக்கு வீதி மிக முக்கியமானதாகும். சிறியவர்கள்
முதற்கொண்டு முதியோர் வரை பாவிக்கின்ற இந்த வீதியால் பாரிய வாகனங்களும்
பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய முக்கியமான வீதியானது பிரதான வீதியைச் சந்திக்கின்ற அதாவது
கமுஃகமுஃ அல்ஹிலால் வித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள சந்தியிலே விரைவிலே
அனர்த்தமொன்று நிகழ்வதற்கான ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருப்பதை அவ்வீதியால்
பயணிக்கின்ற சகலரும் கண்கூடாகக் காணக்கூடியதாக இருக்கின்றது.
டெலிகொம் நிறுவனத்துக்குச் சொந்தமான குழியொன்றுக்குப் போடப்பட்டுள்ள
இரும்பினாலான மூடியானது இன்றைக்கோ நாளைக்கோ குழிக்குள்ளேயே வீழ்ந்து
விடுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. அவ்வாறு விழுந்து விடுகின்ற
சந்தர்ப்பத்திலே, இதன் மேல் பயணிக்கின்ற பொது மக்கள் அல்லது வாகனங்களின்
நிலையைப் பற்றி யோசிக்கவே பயங்கரமாக இருக்கின்றது.
இந்த வீதியால் பயணிக்கின்ற பொது மக்களாயினும் சரி, சம்பந்தப்பட்ட
நிறுவனத்தினராயினும் சரி, நடக்கவிருக்கின்ற விபரீதத்தைப் பற்றி அக்கறை
கொள்வதாகத் தெரியவில்லை. விபரீதம் நடக்கும் வரை காத்திருப்பது போலத் தான்
தெரிகின்றது. வருமுன் காப்போம், கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு
என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் தான் என்பதை ஊர்ஜிதப்படுத்துவது போலவும்
இருக்கிறது.
இதனை செப்பனிடுவதற்கு சில ஆயிரம் ரூபாக்கள் தான் செலவாகப் போகின்றது.
ஆனால், இதனால் சிலவேளை உயிரிழப்பு ஏற்பட்டால், அதன் பெறுமதி எத்தனை
கோடிகளுக்கும் ஈடாகாது என்பது உண்மையிலும் உண்மை. எனவே இத்தகைய வேண்டத்தகாத
நிகழ்வுகள் இடம்பெறும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர், விரைவாக செயலில் இறங்கி மேற்படி குழியின்
மூடியை உரிய முறையில் செப்பனிட்டு நடக்கவிருக்கும் விபரீதத்தை தடுக்க
வேண்டும். மாறாக, தப்பித்தவறி ஏதும் விபரீதம் நிகழுமிடத்து அதற்கான முழுப்
பொறுப்பையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
Sunday, May 18, 2014
கல்முனை மேயரின் உடனடி கவனத்திற்கு!!!!!
கல்முனை மேயரின் உடனடி கவனத்திற்கு!!!!!

சாய்ந்தமருது 14 ம் குறிச்சி அஹ்மத் வீதியில் இன்று காலை 11 மணியளவில் குப்பை சேகரிப்பதற்கு குப்பை மெசின் வந்ததும் அவ் வீதியில் உள்ள பொது மக்கள் தங்களது வீட்டு குப்பைகளை வழமை போன்று வீதியில் வைத்துள்ளனர்.
குப்பை ஏற்ற வந்தவர்கள் இக் குப்பைகளை கண்டும் இவற்றை ஏற்றி செல்லாமல் வீதியில் போட்டு விட்டு சென்றுள்ளனர்
தற்போதைய நிலைமையை கௌரவ மேயர் மற்றும் சாய்ந்தமருது மாநகர உறுப்பினர்களின் கவனத்திற்கு படம் பிடித்து காட்டுகின்றோம். இப்படங்களை பார்த்தாவது உடனடியாக நாளை இக்குப்பைகளை இவ் வீதியில் இருந்து அகற்றுமாறு பொது மக்களாகிய நாங்கள் வேண்டிக்கொள்கின்றோம்.இது உங்களின் உடனடி கவனத்திக்காக.
Saturday, May 17, 2014
கல்முனை ஸாஹிறா பள்ளிவாசலின் தரை ஓடுகள் சீராகப் பொருத்தாததால் தரை சீரழிந்து பல இலட்சம் சேதம் பணமும் பொருளும் வீணாகிப் போயுள்ளது குறித்து மக்கள் கவலை!!
பணமும் பொருளும் வீணாகிப் போயுள்ளது குறித்து மக்கள் கவலை!!!!
கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாசலின் தரை ஓடுகள், முறையற்ற விதத்தில் பொருத்தப்பட்டதன் காரணமாக, அவற்றில் பெரும்பாலான தரை ஓடுகள் கழண்ட வண்ணம் உள்ளன. இவற்றில் சில தரை ஓடுகள் உடைந்தும் காணப்படுகின்றன.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசலானது இவ்வாறு காணப்படுவதால், இதைப் பயன்படுத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாட தொழுகையில் ஈடுபடுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். ரமழான் மாதம் நெருங்கி வரும் நிலையில் இதனை விரைவாக செப்பனிட வேண்டியுள்ளது.
நன்மை கருதி மக்களால் பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட பணம் சரியாகப் பாவிக்கப்படாமல்
இவ்வாறு முறையற்ற விதத்தில் கருமமாற்றி வீணடிக்கப்பட்டிருக்கிறதே என மக்களால் கவலை
தெரிவிக்கப்படுகின்றது.


Monday, May 12, 2014
சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைக்கப் பட்ட மனித கழிவை சுத்திகரிக்கும் கட்டிடம் தொடர்பாக மக்கள் விசனம்!!!
சுனாமிக்கு பின்னரான காலப்பகுதில் அமைக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைக்கப் பட்ட மனித கழிவை சுத்திகரிக்கும் இந்த கட்டிடம் போது மக்களுக்கு எந்தவிதமான நண்மைகளையும் வழங்கவில்லை மாறாக கஸ்டத்தையே வழங்கின..இந்த கட்டிடம் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அதில் இருந்து வந்த துர் நாற்றம் மக்களின் அன்ராட வாழ்க்கையினை பாதித்தது. இதனால் அந்த கட்டிடத்தை சுழவுள்ள மக்கள் பல ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு அரசுக்கு இவ்விடயத்தினை தெரிவித்து உடனடியாக இதனை வேறு இடத்திற்க மாற்றினார்கள். உண்மையிலயே இவ்வாரான கட்டிடங்கள் மனித நடமாற்றம் இல்லாத இடங்களில் அமைப்து தான் பொறுத்தம்.
இன்று மக்கள் செய்தியின் தேடல் சுட்டிக்காட்ட விரும்புவது
இந்த கட்டிடத்தால் புதிய வகையான பிரச்சினைகள் தற்போது வர ஆரம்பித்துள்ளன .....
1 வது பிரச்சினை :
மழை காலங்களில் பெய்கின்ற மழை நீரானது கழிவை சுத்திகரிக்க அமைக்கப்பட்ட திறந்த டாங்கி பகுதிக்குள் தேங்கி நிற்கின்றன அது மாத்திரம் அன்றி டாங்கிற்குள் பல குப்பைகளும் கிடக்கின்றன. இதனால் அந்த இடத்தினை டெங்கு நுழம்புகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் அடிக்கடி சுகயீனம் இல்லாமல் போகின்றனர் (குறிப்பாக குழந்தைகள்)



2வது பிரச்சினை :
இந்த கட்டிடத்தில் ஒரு அறை உள்ளது இரவு நேரங்களில் அந்த அறையில் கஞ்சா சாராயம் போன்றவற்றை குடிப்பதர்க்கு வசதியாக பயண்படுத்திக்கொள்கின்றனர். இது பெரும் பிரச்சினையாக உள்ளது.
அது மாத்திரம் இன்றி சிறு பிள்ளைகளை இரவு நஅரங்களில் அங்கு அழைத்து சென்று சிறுவர் துஸ்பிரயோகங்களிலும் ஈடுபடுகின்றனர் என்றும் அப்பிரதேச மக்கள் விதனம் தெரிவிக்கின்ரனர்.
இவ்வாரான சீர்கேடுகளுக்கு ஆதரவளிக்கும் இந்த கட்டிடத்தை உடணடியாக அவ்விடத்தை விட்டு அகற்றுமாரு அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
உரிய அரசியல் வாதிகள் இந்த பிரச்சினையை உடணடியாக தீர்க்குமாறும் அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்





Subscribe to:
Posts (Atom)























