Saturday, May 10, 2014
Friday, May 9, 2014
கல்முனை பள்ளி வீதியில் உள்ள வடிகானின் நிலை என்ன ?
கல்முனை பள்ளி வீதியில் உள்ள வடிகானின் நிலை என்ன ?நீர் வடிந்தொடுவதற்காக
கட்டப்பட்ட வடிகான்களில் புல் பூண்டுகள் மற்றும் டெங்கு விளைவதட்குரிய
நிலையில் காணப்படுகிறது.கான்களின் மேல் போடப்படும் மூடி சுமார் 5
வருடங்களுக்கு மேல் இதுவரை போடாமல் காணபடுகிறது.சம்மந்தப்பட்ட
அதிகாரிகள்,அரசியல் வாதிகள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவார்களா?Thursday, May 8, 2014
கல்முனை சாஹிபு வீதியின் நிலை என்ன ?
கல்முனை சாஹிபு வீதியின் நிலை என்ன ?பகல்வேளையில் பனிமூட்டம்போல் காட்சியளிக்கும் கல்முனை சாஹிபு வீதி
கல்முனை-௦05 சாஹிபு வீதியை காபட் வீதியாக மாற்றுவதற்கான வேலைகள் முன்னெடுக்கபட்டு தற்பொழுது அரைகுறையில் கைவிடப்பட்டுள்ளதால் கடந்த மூன்று நான்கு மாதகாலமாக மக்கள் கடும் அசௌகரிகங்களுக்குள்ளாகி உள்ளனர்.
தற்பொழுது நிலவுகின்ற கடும் உஷ்ணமான சூழ்நிலையில் இவ்வீதியில் வாகனப்போக்குவரத்தால் எழுகின்ற புழுதி கலந்த காற்றால் பகல்வேளை பணிமூட்டம்போல் காட்சியளிக்கின்றது. இவ்வீதியில் அமைந்துள்ள அனைத்து வீடுகளும் புழுதி படிந்து அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. அதிலும் முக்கியமாக சிறுகுழந்தைகள் இத்தூசு படிந்த காற்றை சுவாசிப்பதால் நோய்வாய்படுகின்ற அளவும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. ஆகவே பொறுப்புவாய்ந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவ்வீதி தொடர்பாக மிகக்கூடிய கவனம் எடுத்து மிக விரைவாக இவ்வீதியை பூரணப்படுத்தி தருமாறு இவ்வீதியில் வசிக்கும் மக்கள் வேண்டுகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)










